பட்டாசு ஆலைவிபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா 3 இலட்சம் நிவாரணம்.

by Editor / 26-02-2022 12:06:14pm
பட்டாசு ஆலைவிபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா 3 இலட்சம் நிவாரணம்.

 கோவில்பட்டி அருகே துறையூரில் செயல்பட்டு வரும் செஞ்சுரி ஃபயர் ஓர்க்ஸ் பட்டாசு ஆலையில்  ஏற்பட்ட வெடி விபத்தில் அந்த ஆலையில் பணியாற்றிய தொட்டம்பட்டியை சேர்ந்த ஜெயராஜ், ஈராட்சியை சேர்;ந்த ராமர், குமராபுரத்தினை சேர்ந்த தங்கவேல், நாலாட்டின்புதூரைச் சேர்ந்த கண்ணன் ஆகியோர் உயிரிழந்தனர்.. பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 4 தொழிலாளர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தது மட்டுமின்றி தலா 3 லட்ச ரூபாய், முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண உதவி தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்து இருந்தார். இதையெடுத்து இன்று உயிரிழந்த 4 தொழிலாளர்களின் வீடுகளுக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியது மட்டுமின்றி, தமிழக முதல்வர் அறிவித்த ரூ 3லட்ச ருபாய் நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினர்.

பட்டாசு ஆலைவிபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா 3 இலட்சம் நிவாரணம்.
 

Tags : Government provides Rs 3 lakh each to the families of the victims of the firecracker factory accident.

Share via