அயோத்தியில் தரிசனத்திற்காகக் காத்திருந்த இருவர் உயிரிழப்பு.

உ.பி:அயோத்தி ராமர் கோயிலில் தரிசனத்திற்காகக் காத்திருந்த இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தி ஸ்ரீ ராமரை வழிபட ஹரியானாவிலிருந்து வந்திருந்த பிம்லா தேவி (60) மற்றும் 65 வயதுடைய ஆண் பக்தர் தரிசனத்திற்காக காத்திருந்தபோது திடீரென மயக்கமடைந்தனர். இதையடுத்து, ஸ்ரீராம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
Tags : Two people died while waiting for darshan in Ayodhya.