சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணு விஷால்
மிக்ஜாக் புயல் காரணமாக சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை ஓய்ந்த நிலையிலும், பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் சென்னை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் X தள பக்கத்தில், எனது வீட்டிலும் தண்ணீர் புகுந்தது, காரப்பாக்கத்தில் தண்ணீரின் அளவு மோசமாக உயர்ந்து வருகிறது. உதவிக்காக தொடர்பு கொண்டுள்ளேன். மின்சாரம் இல்லை, செல்போனில் சிக்னலும் இல்லை. எனக்கும், என்னை போல இங்கு உள்ள மக்களுக்கும் உதவி கிடைக்கும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
Tags :