by Staff /
09-07-2023
02:28:29pm
<br />
சென்னை மெரினா கடலுக்குள் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக ரூ.81 கோடி செலவில் பேனா சின்னம் அமைக்க தமிழக அரசு பணிகளை தொடங்கியுள்ளது. இதற்கு மீனவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடலில் பேனா சின்னம் வைப்பதற்கு தடை விதிக்கக்கோரி மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.<br />
Tags :
Share via