சடலமாக மீட்கப்பட்ட நர்சரி பண்ணை அதிபர்

by Staff / 09-07-2023 02:24:36pm
சடலமாக மீட்கப்பட்ட நர்சரி பண்ணை அதிபர் கன்னியாகுமரியின் சுசீந்திரம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட கீழ வண்ணான்விளையை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் கோபி (21). இவர் அந்த பகுதியில் நர்சரி கார்டன் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 6ஆம் தேதி கோபி திடீர் என்று மாயமானார். அன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. கோவளம் டி.சி.நகர் பகுதியில் முட்பு தர்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் நேற்று இரவு ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.<br /> &nbsp;
 

Tags :

Share via