by Staff /
09-07-2023
02:10:39pm
நிஜாமாபாத் மாவட்டத்தில் 13 வயது சிறுமிக்கு 45 வயது நபருடன் திருமணம் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பாபூர் தாண்டாவை சேர்ந்த ஒருவர் ரூ. 60 ஆயிரம் கடன் வாங்கி அதை திரும்ப கொடுக்க முடியாத காரணத்தால் தனது 13 வயது மகளுக்கு 45 வயதுடைய சாயப் ராவ் என்ற நபருக்கு ஜூலை 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு திருமணம் செய்து வைத்தார். சேப் ராவ் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தகவலறிந்து போலீசார் அந்த கிராமத்துக்கு சென்று பார்த்தபோது, சயப் ராவ் ஏற்கனவே சிறுமியை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
Tags :
Share via