by Staff /
09-07-2023
03:38:45pm
<br />
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் பயணமாக ஜூலை 21ஆம் தேதி இந்தியாவுக்கு வரவுள்ளார். இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திப்பார் என தெரிகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற மக்கள் எழுச்சியில் கோத்தபய ராஜபக்ச பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நாட்டின் அதிபராக நியமிக்கப்பட்ட பிறகு, விக்கிரமசிங்கே இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். விக்ரமசிங்கே செப்டம்பர் 2024 வரை ராஜபக்சேவின் மீதமுள்ள பதவிக் காலத்திற்கு அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் <br />
Tags :
Share via