மருத்துவ மாணவர் சேர்க்கை - விரைவில் பட்டியல் வெளியீடு

by Staff / 09-07-2023 03:34:01pm
மருத்துவ மாணவர் சேர்க்கை - விரைவில் பட்டியல் வெளியீடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மெரிட் பட்டியல் ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்தாண்டு நிலவரப்படி 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்கள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளது.தமிழகத்தில் மருத்துவ இளநிலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 12ஆம் தேதி வரை 2 நாள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மெரிட் பட்டியல் ஜூலை 16-ம் தேதி வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார்.
 

Tags :

Share via