முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் நிதிஷ்

பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் பங்கு வகிக்க உள்ளதாக பீகார் அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளி வந்துள்ளது. நாளை மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் டெல்லி சென்றுள்ள நிதிஷ் குமார் மோடி, அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். 1999-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில், நிதிஷ் குமார் மத்திய அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :