என்னோட பேவரைட் இந்தியன் படம்தான்.. சிம்பு
இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா மேடையில் பேசிய நடிகர் சிம்பு, லேட்டாக வர்றேன்னு எதுவும் நினைச்சுக்காத்தீங்க. மணி சாரோட ‘தக் லைஃப்' படத்தோட ஷூட்டிங்ல இருந்துதான் வர்றேன். 'இந்தியன்' படம்தான் என்னோட பேவரைட்னு நான் கமல் சார்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கேன். பல முறை இந்தப் படத்தை பார்த்துருக்கேன். கமர்ஷியல் படத்துக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் படத்துல இருக்கும். இப்போ கமல் சார் கூட சேர்ந்து நடிக்கிற வாய்ப்பு கிடைச்சுருக்கு. அதை பத்தி 'தக் லைஃப்' மேடையில பேசுறேன் என அவர்க கூறியுள்ளார்.
Tags :