யானை தந்தத்தை கோடிரூபாய்க்கு விற்க  முயன்ற 3 பேர் கைது.

by Editor / 16-06-2024 11:34:47pm
யானை தந்தத்தை கோடிரூபாய்க்கு விற்க  முயன்ற 3 பேர் கைது.

திண்டுக்கல் மாவட்டம் , கன்னிவாடி வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 யானை தந்தங்களுடன் குற்றவாளிகள் பிடிபட்ட நிலையில் அவர்களிடம் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் பழனி வனச்சரக வனப்பகுதிக்குள் யானையின் உடல்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . எனவே யானை தந்த வழக்கு பழனி வனச்சரக அதிகாரிகளின் விசாரணைக்காக அனைத்து குற்றவாளிகள் மற்றும் பிடிபொருட்கள் பழனி வனச்சரகத்தில் தமிழ்நாடு வன உயிரின குற்ற தடுப்பு பிரிவினரின் தலைமையிலான குழுவினர் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் பழனி அருகே புளிய மரத்து செட் வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தத்தை திருடி விற்க முயன்ற மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.தந்தத்தை பறிமுதல் செய்து வனத்துறையினர் நடவடிக்கை மேலும் 3 பேரிடம்  வனத்துறையினர் நடத்திய விசாரணையில் ஒரு கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது அம்பலமாகியுள்ளது.

 

Tags : யானை தந்தத்தை கோடிரூபாய்க்கு விற்க  முயன்ற 3 பேர் கைது.

Share via