குரூப் அட்மின்களுக்கு ட்ரீட்டாக ரெண்டு அப்டேட் கொடுத்த வாட்ஸ்அப் !

by Editor / 24-03-2023 07:30:01am
குரூப் அட்மின்களுக்கு ட்ரீட்டாக ரெண்டு அப்டேட் கொடுத்த வாட்ஸ்அப் !

வாட்ஸ்அப் நிறுவனம் அதன் செயலியில் குரூப்களுக்கான புதிய அப்டேட்களை வழங்கியுள்ளது.

அவாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வபோது புதுப்புது அப்டேட்களை அள்ளிக் கொடுத்து வருகிறது.

 சமீபத்தி ஸ்டேட்டஸ் அம்சத்தில் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி பயனர்களின் வரவேற்பை பெற்றநிலையில், தற்போது குரூப்களுக்கான புதிய அப்டேட்களை வழங்கியுள்ளது.

 அதாவது, வாட்ஸ் அப் குரூப்களில் யார் உறுப்பினராக வர இயலும், யார் வர இயலாது என்பதை அட்மின்கள் மிக எளிதாக தீர்மானிக்க முடியும். 

மிக முக்கியத்துவம் வாய்ந்த உரையாடல்கள், ரகசியத்தன்மை வாய்ந்த விஷயங்கள் நிறைந்த குரூப்களில் இந்த அப்டேட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இத்துடன் ஏதேனும் காண்டாக்ட் பெயரை க்ளிக் செய்தால், எந்த க்ரூப்-இல் இருக்கின்றீர்கள் என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

 இந்த அப்டேட் மூலம் மற்றவர்களுடன் நீங்கள் இருக்கும் க்ரூப்களை எளிமையாக தெரிந்துகொள்ளலாம். இந்த புதிய அப்டேட்கள் வரும் வாரங்களில் சர்வதேச அளவில் வெளியிட இருக்கிறது.

 இதுதவிர குரூப்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாக மாற்ற தொடர்ந்து புதிய அப்டேட்கள் வழங்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

அடுத்த அப்டேட்டாக, தேதி வாரியாக மெசேஜ் தேடி பார்க்ககும் விதமாக புதிய அப்டேட்டையும் வழங்கியுள்ளது.

 அதாவது, வாட்ஸ் அப்-பில் உங்கள் ஒருவருடைய சாட்டில் 4, 5 மாதங்களுக்கு முன்னால் அவர் அனுப்பிய செய்தியை படிக்க விரும்பினால் நீங்கள் தொடர்ந்து கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்து கொண்டே இருக்க வேண்டும். சரியாக உங்கள் விருப்பத்திற்குரிய தேதி வந்ததும் அந்த செய்தியை நீங்கள் தேடிப் படிக்க வேண்டும்.

ஆனால், வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய அப்டேட்டில், வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தேதி இடைவெளியில் பகிர்ந்து கொண்ட மெசேஜ்களை பில்டர் செய்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

 ஒவ்வொரு நபரும் சாட் விண்டோவில் உள்ள ஃபுரொபைல் செக்ஷனுக்கு சென்று இந்த செட்டிங்க்ஸ் செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த அப்டேட் ஐஃபோன் பயனாளர்களுக்கு மட்டும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via