மகாளய அமாவாசை-நம் முன்னோர்கள் தம் சந்ததியினரை காண்பதற்காக இந்த மண்ணுலகுக்கு வருவார்கள்.

by Admin / 02-10-2024 02:02:41am
 மகாளய அமாவாசை-நம் முன்னோர்கள் தம் சந்ததியினரை காண்பதற்காக இந்த மண்ணுலகுக்கு வருவார்கள்.

அமாவாசை அன்று ,நம் முன்னோர்கள் தம் சந்ததியினரை காண்பதற்காக இந்த மண்ணுலகுக்கு வருவார்கள் என்று சொல்லப்படுகிறது.  புரட்டாசி மாசத்தில் வரக்கூடிய அமாவாசை மகாளய அம்மாவாசை என்று குறிப்பிடப்படுகின்றது.

. நம் முன்னோர்கள் ஆகிய  பித்துருக்கள் புரட்டாசி மாசம் வரக்கூடிய அமாவாசையில் அவர்களுக்குரிய வழிபாட்டை நாம் மேற்கொண்டால் நம்மோடு 15 நாட்கள் இருப்பார்கள் என்கிற ஐதீகம் உண்டு. ஆனால், இன்றைக்கு இருக்கின்ற கால சூழலில்... நம் முன்னோர்களுக்கு 15 நாட்கள் விரதம் இருந்து வழிபாடு நிகழ்த்துவது என்பது எல்லோராலும் இயலாத நிலை.அதனால் தான் அமாவாசையாகிய அந்த ஒரு நாளில், நம் முன்னோர்களை வழிபாடு செய்தால், நமக்கு அவர்கள் வழியில் ஆசிகளை வழங்கி நம்மளுடைய வாழ்க்கையை வளப்படுத்துவர். அதனால் மகாள அமாவாசை அன்று நம் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்து நீராடி விளக்கேற்றி வழிபட்டால்... அவர்கள் ஆசியோடு நம்மளுடைய வாழ்க்கை சிறப்படையும் என்று சொல்லப்படுகிறது..

 மகாளய அமாவாசை-நம் முன்னோர்கள் தம் சந்ததியினரை காண்பதற்காக இந்த மண்ணுலகுக்கு வருவார்கள்.
 

Tags :

Share via