ஆசை வார்த்தை சொல்லி பள்ளி மாணவியை சீரழித்த மினிபஸ் டிரைவர்

by Admin / 19-12-2021 04:42:49pm
ஆசை வார்த்தை சொல்லி பள்ளி மாணவியை சீரழித்த மினிபஸ் டிரைவர்

சமீப காலங்களில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் பள்ளி மாணவிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. பலாத்காரத்தினால் பாதிக்கப்படும்  மாணவிகளின் பட்டியல் ஒருபுறம் இருக்க, ஆசை வார்த்தையில் மயங்கி வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகளின் பட்டியல் அதைவிட அதிகமாக இருக்கிறது. மதுரையில் நடந்துள்ள சம்பவம் இதை தெளிவாக்குகிறது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பூச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவருக்கு திருமணமாகி, மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர் அதே பகுதியில் மினி பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மினிபஸ்ஸில் அடிக்கடி பள்ளிக்கு பயணம் செய்த ப்ளஸ் 2 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்துக்கொளவதாகவும் ஆசைவார்த்தை கூறி 17 வயது சிறுமியை கடத்தி சென்றுள்ளார்.
 
சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதன்காரணமாக மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனையடுத்து பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலே முடங்கியுள்ளார்.

இந்நிலையில் நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறி கண்ணீர் வடித்துள்ளார். சிறுமியின் தாய்  சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய மினி பஸ் டிரைவர் தங்கபாண்டியனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீஸார்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories