மல்யுத்த போட்டியின்போது மயங்கி விழுந்த வீரர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மல்யுத்த போட்டியின் போது வீரர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்துவா பகுதியில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில், சோனு (28) என்பவர் கலந்து கொண்டார். அப்போது போட்டியின் நடுவே அவர் திடீரென மயக்கமடைந்து விழுந்தார். இதையடுத்து, சோனு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டாக கூறியுள்ளனர்.
Tags :