கண்ணிமைக்கும் நேரத்தில் தகர்க்கப்பட்ட நொய்டா கட்டடம்

by Writer / 28-08-2022 03:50:22pm
கண்ணிமைக்கும் நேரத்தில் தகர்க்கப்பட்ட நொய்டா கட்டடம்


நொய்டாவில்  விதிகள்  மீறிகட்டப்பட்ட  கட்டிடம் சரியாக 2.30 மணியளவில் 9 நிமடங்களில் இடிந்து தரைமட்டமாகியது .ஒன்பது  ஆண்டு சட்டப்போராட்டம்  இன்று முடிவுக்கு வந்தது .புதிய தொழில் நுட்பத்தின்  அடிப்படையில்  கேரளாவிற்கு   பிறகு  இடிக்கப்பட்ட இரண்டாவது  கட்டிடம். ஆயிரக்கணக்கான  தொழிலாளர்களின்   உழைப்பு . பல நூறு  கோடி பொருளாதார இழப்பு... .எல்லாம்  விதிகளை   மீறியதால்  வந்த வினை. விதிகள்  மீறுவதற்கு  அனுமதிக்கக் கூடாது  என்பதற்கு  உச்சநீதிமன்றத்தீர்ப்பு   மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்   விதி மீறுபவர்களுக்கு  இக்கட்டட இடிப்பு  ஒருசவுக்கை  அடியாகவும் கருதவேண்டும்.மக்களின் நலனை  பேணவே அனைத்து விதி முறைகளும்  உள்ளன .இடிக்கப்பட்ட கட்டிட  கழிவுகளை  அகற்ற  மூன்று  மாதங்கள்  ஆகும்  என்று கட்டட  இடிப்பு பணியை மேற்கொண்ட  மும்பை நிறுவனம்  சொல்லியிருக்கிறது.  3.700 கிலோ வெடி மருந்து  32 மாடிக்கட்டத்தை  20 கோடி  செலவில் தகர்த்திருக்கிறது.

கண்ணிமைக்கும் நேரத்தில் தகர்க்கப்பட்ட நொய்டா கட்டடம்
 

Tags :

Share via