"திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு"

by Staff / 05-08-2024 12:18:03pm

கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக 29-வது வார்டு உறுப்பினரான ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ராஜினாமா செய்ததை அடுத்து புதிய மேயர் தேர்வாகிறார். கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு நாளை மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories