போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது.

by Editor / 03-03-2024 09:46:32am
போலியோ சொட்டு மருந்து முகாம்  இன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறுகிறது.மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கும் பகுதிகளுக்கும் வாகனங்கள் மூலமாக சென்று சொட்டுமருந்து வழங்கப்பட உள்ளன.இம்மையங்களில் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துவழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க அழைத்துச் செல்லலாம்.

5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவது Sanitizer உபயோகப்படுத்துவது கட்டாயமாகும். அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.இந்த முகாம்கள் 7நாட்களுக்கு நடைபெற உள்ளன.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி நகர்ப்புற நகர் நல ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் இந்த முகாமினை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்தை வழங்கினார் இதில் திரளான மருத்துவத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

Tags : போலியோ சொட்டு மருந்து முகாம்

Share via