12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான  அலகுத்தேர்வுகள் அறிவிப்பு

by Editor / 19-05-2021 04:03:15pm
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான  அலகுத்தேர்வுகள் அறிவிப்பு



பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான அலகுத்தேர்வுகள்  வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் வாட்சாப்பில் மாணவிகளுக்கு தனியாகவும், மாணவர்களுக்கு தனியாகவும் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். மாணவ - மாணவிகளுக்கான தனித்தனியாக குழுக்களை உண்டாக்கிய பின்னர் வினாத்தாளை அனுப்ப வேண்டும்.வினாத்தாள்களை பார்த்து தனித்தாளில் மாணவ - மாணவியர்கள் பதில்களை எழுதி, அதனை பி.டி.எப் முறையிலான உள்ளடக்கத்தில் அனுப்ப வேண்டும். விடைத்தாளில் மாணவரின் பெயர், அவரது தேர்வு அடையாளம் எண், பெற்றோர்கள் கையொப்பம் போன்றவை இடம்பெற வேண்டும். 
வாட்சப் குழுக்களில் தேர்வு வினாத்தாள் மற்றும் பதில் விடைத்தாள் தவிர எந்ததொரு விடியோ மற்றும் புகைப்படம் அனுப்ப கூடாது. மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு பதில் விடைத்தாள்களை சேகரித்து வைத்து, பள்ளிகள் திறந்ததும் ஆசியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via