மநீம பொதுச்செயலாளர்  முருகானந்தம்  விலகல் கமல் மீது சரமாரி புகார் 

by Editor / 19-05-2021 04:00:05pm
  மநீம பொதுச்செயலாளர்  முருகானந்தம்  விலகல் கமல் மீது சரமாரி புகார் 


மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்துபொதுச்செயலாளர் பதவி வகித்து வந்த முருகானந்தம் பதவி விலகியிருக்கிறார். 
சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.முதலில், மக்கள் நீதி மய்யத்திலிருந்து துணைத் தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகினர். அவர்களைத் தொடர்ந்து வேளச்சேரி மநீம வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட மநீம வேட்பாளர் பத்ம பிரியா ஆகியோர் விலகினர்.
இவர்களைத் தொடர்ந்து தற்போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்த முருகானந்தம் பதவி விலகியிருக்கிறார். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். மொத்தம் 194558 வாக்குகளில் முருகானந்தம் 14547 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
இந்நிலையில் கட்சியிலிருந்து விலகுவதாக அவர் கமலுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் “கட்சியின் அடிப்படை உறுப்பினர், மநீம கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகளின் பொதுச் செயலாளர் என அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாகத் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அதில், “கட்சியில் தற்பொழுது நிலவக்கூடிய ஜனநாயகமற்ற சூழ்நிலையில், நான் இனியும் கட்சியில் தொடர்ந்து நீடிப்பது சரியில்லை என முடிவு செய்துள்ளேன். மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்தது முதல் என் மீது நம்பிக்கை வைத்து வழங்கப்பட்ட அனைத்து பொறுப்புகளையும் நான் திறம்பட செய்து தென்மண்டலம் முழுவதும், குறிப்பாக டெல்டா பகுதிகளிலும், திருச்சி மண்டலத்திலும் கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த சூழ்நிலையில், நான் ராஜினாமா செய்வதற்கான காரணத்தையும் வேதனையையும், பொது மக்களுக்கு விளக்கக் கடமைப்பட்டுள்ளவனாக உள்ளேன். கட்சியில் இணைந்த பொழுது எனக்கான சுதந்திரமும், ஜனநாயகமும் கொடுக்கப்பட்டதால் என்னால் முழுவதும் திறம்பட உழைக்க முடிந்தது.
சர்வாதிகாரம் தலை தூக்கிவிட்டது என்று கமலை கடுமையாகி சாடி  உள்ளார்.

 

Tags :

Share via