லிஃப்ட் இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்காவில் ரஸ்டன்பர்க்கில் உள்ள இம்பாலா பிளாட்டினம் ஹோல்டிங்ஸில் லிஃப்ட் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். நேற்றைய தினம் இந்த விபத்து நடந்துள்ளது. தொழிலாளர்கள் பணியை முடித்துக் கொண்டிருந்த போது லிஃப்ட் திடீரென 200 மீட்டர் தூரம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர், 75 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :