ஆன்லைன் சூதாட்டத்தை முழுவதுமாக தடை செய்ய முடியாது -கார்த்தி சிதம்பரம் பேட்டி

by Editor / 01-05-2022 03:05:35pm
ஆன்லைன் சூதாட்டத்தை முழுவதுமாக தடை செய்ய முடியாது -கார்த்தி சிதம்பரம் பேட்டி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூரில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பின் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் பேட்டிஆன்லைன் சூதாட்டத்தை முழுவதுமாக தடை செய்ய முடியாது வேண்டுமானால் அதற்கு ஒரு அளவுகோல் ‌ வைக்கலாம்  முழுமையாக தடை செய்தால் அதை தாண்டி டார்க் வெப்பில் வேறு ஏதாவது முறைகேடாக நடக்கும்

 இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதற்கு மத்திய அரசு ஒழுங்காக வினியோகம் செய்யாதது தான் என்பது தெளிவாக தெரிகிறது.தமிழ்நாட்டில் மட்டும்தான் மின்வெட்டு இருக்கிறது என்று சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தையும் பார்த்துவிட்டு  பேச வேண்டும் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி செய்த போது  எற்பட்ட பிரச்சனை தான் தற்போது நிலவுகிறது.என்றார்..

 

 

Tags :

Share via

More stories