மதுரை மருத்துவக்கல்லூரி டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

by Editor / 01-05-2022 03:51:27pm
மதுரை மருத்துவக்கல்லூரி டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்க வைத்த விவகாரம் தொடர்பாக மதுரை மருத்துவக்கல்லூரி டீன் மருத்துவர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.மேலும் தன்னிச்சையாக விதிமுறையை மீறி இப்போ கிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் என்னும் உறுதிமொழியை மாணவர்களிடம் எடுக்க வைத்ததற்கு துறை ரீதியாக விசாரணை நடத்த மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபுவுக்கு  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இனிவரும் காலங்களில் அனைத்துத் துறைத் தலைவர்களும் எப்பொழுதும் பின்பற்றப்பட்டு வரும் இப்போ கிரெடிக் உறுதிமொழி இதையே தவறாது கடைபிடிக்க  மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகம் மூலம் சுற்றறிக்கை வாயிலாக  அறிவுறுத்தப்ப்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo