உலகின் மிக வயதான நபராக மாறிய ஜப்பானிய பெண்

by Staff / 23-08-2024 02:25:58pm
உலகின் மிக வயதான நபராக மாறிய ஜப்பானிய பெண்

ஜப்பானைச் சேர்ந்த 116 வயதான டோமிகோ இடிகா என்ற பெண் உலகின் மிக வயதான நபர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் தனது 70 வயதில், ஜப்பானின் 3,067 மீட்டர் உயரமான ஒன்டேக் மலையை இரண்டு முறை ஏறி சாதனை படைத்தார். முன்னதாக அதிக வயதுடைய நபராக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா பிரன்யாஸ் மோரேரா (117) என்பவர் இருந்தார். அவர் கடந்த 20ஆம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் தற்போது 116 வயதான டோமிகோ இடிகா அந்த சாதனையைப் பெற்றுள்ளார்.

 

Tags :

Share via