கன்னியாகுமரியில்  8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல். 

by Editor / 24-03-2025 07:32:49am
கன்னியாகுமரியில்   8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல். 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படிதுணைகண்காணிப்பாளர்  மகேஷ் குமார் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருண்,போக்குவரத்து உதவி ஆய்வாளர்  ஜெயபிரகாஷ் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கன்னியாகுமரி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்பொழுது  ஓட்டுநர் உரிமம் இன்றியும், நம்பர் பலகை இல்லாமலும், அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தி அதிவேகமாக ஆபத்தான முறையில் இயக்கப்பட்ட  8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

 

Tags : கன்னியாகுமரியில்  8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல். 

Share via