மாணவியை வகுப்பறையில் அனுமதிக்காமல் வாசலில் அமர வைத்து தேர்வு எழுத சொல்லிய தனியார் பள்ளி.

by Editor / 10-04-2025 09:07:05am
மாணவியை வகுப்பறையில் அனுமதிக்காமல் வாசலில் அமர வைத்து தேர்வு எழுத சொல்லிய தனியார் பள்ளி.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சுவாமிசித்பவானந்த மெட்ரிக் ஹையர்செகண்ட்ரி பள்ளி  மாதவிடாயை காரணம் காட்டி, மாணவியை வகுப்பறையில் அனுமதிக்காமல் வாசலில் அமர வைத்து தேர்வு எழுத சொல்லியதாக தனியார் பள்ளி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவியின் தாய், செல்போனில் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி நிர்வாகம் மீது அரசு துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Tags : மாணவியை வகுப்பறையில் அனுமதிக்காமல் வாசலில் அமர வைத்து தேர்வு எழுத சொல்லிய தனியார் பள்ளி.

Share via

More stories

Logo