6 மாவட்டங்களில் இன்று  லேசானது முதல் மிதமான மழை.

by Editor / 04-07-2024 09:21:46am
6 மாவட்டங்களில் இன்று  லேசானது முதல் மிதமான மழை.

 தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலொ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

 

Tags : மாவட்டங்களில் இன்று  லேசானது முதல் மிதமான மழை

Share via