பீகார் மாநிலத்தின் 10-.வது முறையாக நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்றாா்
பீகார் மாநிலத்தில் தேசிய கூட்டணி அமோக வெற்றி பெற்றவை அடுத்து பீகார் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.. பீகார் ஆளுநர் ஆரி முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார் 10-வது.முறையாக நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்றாா்... பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.. பாஜகவை சேர்ந்த சாம்ராஜ் சவுத்ரி மற்றும் விஜயகுமார் சிங்கா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவி ஏற்றனர் .தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சேர்ந்த 26 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.. பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி புதிய அரசாங்கத்தை வாழ்த்தி நிதிஷ் குமாரின் அனுபவத்தை எடுத்துக்காட்டியதோடு பீகாரின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற புதிய அரசாங்கம் உறுதியோடு துணை நிற்கும் என்று பாராட்டினார்..
Tags :



















