ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை

by Staff / 19-04-2024 12:10:35pm
ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது, மாலை 6 மணி வரை வாக்குப்பதிவானது நடைபெறுகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இதுவரையில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. பரந்தூர் விமான நிலைய பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தேர்தலை ஒன்று கூடி புறக்கணித்துள்ளனர். வாக்குச்சாவடியில் உள்ள போலீசார் வாசலிலேயே நின்று வாக்காளர்கள் வருகிறார்களா என பார்க்கின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo