மூன்று பெண்கள் பலாத்காரம் குடும்ப முன்னிலையில்

ஹரியானா மாநிலம் பானிபட்டில் நான்கு பேர் சேர்ந்து மூன்று பெண்களை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். புதன்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆயுதங்களுடன் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல் இச்சம்பவம் நடந்த இடத்தில் அருகிலேயே, ஒரு பெண் கொலை செய்யப்பட்டு அவரது கணவரிடம் இருந்து பணம் திருடப்பட்டுள்ளது. இந்த இரண்டு சம்பவங்களிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரே கும்பலே சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு பண்ணி போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags :