ஜனவரி 19 ம்தேதி இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களில் பரவலாக கனமழை
தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
கிழக்கத்திய அலையானது (Easterly Trough) இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடல் நோக்கி நகருகிறது. இதனால் ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று வலுவாக தென் மாவட்டங்களில் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் நாளை இரவு முதல் ( ஜன 18) மழை துவங்கும்.
ஜனவரி 19 ம்தேதியை பொறுத்தவரை சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு கடலூர் விழுப்புரம் மயிலாடுதுறை தஞ்சை நாகை திருவாரூர் புதுக்கோட்டை இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை குமரி ஆகிய அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும்.குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று தென் மாவட்டங்களில் குவியும் என எதிர்பார்க்கப்படுவதால் நாளை இரவு முதல் தென் கடலோர மாவட்டங்களில் மழை துவங்கும். குறிப்பாக ஜனவரி 19 ம்தேதி இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும்.
ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று தென் தமிழக மலைகளின் மீது மோதும் என்பதால் மணிமுத்தாறு நீர்பிடிப்பு பகுதிகளான மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து ஆகிய இடங்களில் பெருமழைக்கு வாய்ப்பு. ஒரே நாளில் 300 மிமீக்கு மேல் மழை பதிவாக வாய்ப்புள்ளது. எனவே மாஞ்சோலை பகுதியை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை விலக சாத்தியமில்லை:
1971 முதல் 2024 வரையிலான காலத்தில் 1994 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ம்தேதி வடகிழக்கு பருவமழை மிக வேகமாக முன்கூட்டியே விலகியுள்ளது. அதே போல கடந்த 55 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை தாமதமாக விலகிய ஆண்டு 2021. 2021 ம் ஆண்டு வரலாற்றில் மிக தாமதமாக ஜனவரி 19ம் தேதி பருவமழை விலகியுள்ளது. தற்போது அதை முறியடித்து மேலும் தாமதமாக பருவமழை விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.பருவமழை ஜனவரி மாதத்திலும் தொடர்வதால் வானிலையை கண்காணிக்கும் பணி சற்று அதிகரித்துள்ளது.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags : ஜனவரி 19 ம்தேதி இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களில் பரவலாக கனமழை