காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிரமாக தாக்கியது. 

by Admin / 17-01-2025 12:06:42pm
காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிரமாக தாக்கியது. 

தோஹா , கெய்ரோ, ஜெருசேலம் போர் நிறுத்தம் மற்றும் பணைய கைதிகளை விடுதலை செய்வதற்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சில நேரங்களில் காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிரமாக தாக்கியது.  இரு தரப்புக்கு இடையில்  சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதோடு சண்டையை நிறுத்துவதற்கான முயற்சியையும் மேற்கொண்டனர்.. ஜனவரி 20ஆம் தேதி ட்ரம் பதவி ஏற்க உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே இஸ்ரேல்- காசா இடையிலே ஆன போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என்றும் அதற்க்கு ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் கடுமையான விளைவுகளை எதிர் நோக்க வேண்டும் என்று அமெரிக்க புதிய அதிபர் ட்ரம் எச்சரித்ததை அடுத்து போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்திற்கு அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோபைடன் அடுத்து பதவி ஏற்க உள்ள ட்ரம் ஆகிய இருவருடைய பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதப்படுகிறது.. இந்தப் போர் நிறுத்தமானது நிரந்தரமானது அல்ல என்றும் இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பை கருதி அமைச்சரவை மற்றும் அரசாங்கம் அங்கீகரிக்கப்படும் வரை இது அதிகாரப்பூர்வமாக இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.

 

Tags :

Share via