ஊரக உள்ளாட்சி தேர்தலில் சபாநாயகர் அப்பாவு, வைகோ வாக்களித்தனர்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
வள்ளியூர் ஒன்றியத்தில் 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு வாக்களித்தார். பணகுடி அருகேயுள்ள லெப்பை குடியிருப்பு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சபாநாயகர் அப்பாவு தனது வாக்கை பதிவு செய்தார்.
தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தனது வாக்கை பதிவு செய்தார்.வைகோவுடன் அவரது மகன் துரை வைகோவும் வாக்களித்தார்.நாமக்கல் மாவட்டத்தில் 141 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.முதல்கட்ட தேர்தல் அக்டோபர் 6-ந் தேதி நடைபெற்று முடிந்தது.
14 ஆயிரத்து 662 பதவியிடங்களுக்கு நடந்த இந்த தேர்தலில் 77.43 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குபெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் 74 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இதில் 9 மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகள், 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 341 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.
இந்த 9 மாவட்டங்களை தவிர்த்து ஏனைய 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி இடங்களுக்கும் தேர்தல்நடந்தது /அதன்படி, இந்த மாவட்டங்களில் 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 40 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 106 கிராம ஊராட்சி தலைவர், 630 கிராம ஊராட்சி உறுப்பினர் என மொத்தம் 789 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
Tags :