பிரபல வட சென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர்

சென்னையில் இன்று அதிகாலை பிரபல வட சென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். என்கவுண்டர் செய்யப்பட்ட காக்கா தோப்பு பாலாஜி மீது பல்வேறு கொலை வழக்குகளும் கொலை முயற்சி வழக்குகளும் என 59 வழக்குகள் நிறுவனர் உள்ளதாக தெரிகிறது தலைமறைவாக செயல்பட்டு வந்த காக்கா தோப்பு பாலாஜியை என்ற அதிகாலை கொடுங்கையர் மேம்பால பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினரிடம் பிடிபட்ட நபர் காருக்குள் இருப்பது காக்கா தோப்பு பாலாஜி என்று கூற அவர் வேகமாக காரை எடுத்து சென்றதை அடிப்படையாக வைத்துக் கொண்டு காவல்துறையினர் அவருடைய காரை விரட்டி பிடித்து வியாசர்பாடி அருகே அவர் காரை விட்டு ஓடிச் செல்லும் பொழுது காவல்துறையினர் மீது கள்ளத் துப்பாக்கி கொண்டு சுட்டு உள்ளார். அவரை எதிர்கொள்ளும் விதமாக கொடுங்கையூர் காவல் ஆய்வாளர்சரவணன் சுட்டதில் பாலாஜி மார்பில் குண்டு பாய்ந்தது.. அவரை மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்படுகிறது அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிய வந்தது அதனை அடுத்து அவருடைய உடலை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடல்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையராக அருண் பதவி ஏற்றதில் இருந்து இது இரண்டாவது என்கவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :