கிணற்றில் குதித்த மனைவி தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவனும் பலி

by Editor / 02-02-2023 07:37:38am
கிணற்றில் குதித்த மனைவி தற்கொலை  காப்பாற்ற முயன்ற கணவனும் பலி

சேலம் மாவட்டம் ஆத்தூர்  பைத்தூர் ரோட்டில் வசித்து வந்தவர் விவசாயி விஜயகுமார் (வயது30) இவரது மனைவி கவுசல்யா (வயது 23).இந்த தம்பதிக்கு ஹரிசுதன் (வயது4) என்ற மகனும், கீர்த்தி(7 மாதம்) கைக் குழந்தையான மகளும் உள்ளனர். இதனிடையே விஜயகுமார் தனது குடுமபத்துடன் தெற்கு காடு சோழன் சாலையில் உள்ள ரவி என்பவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார், இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது, இந்தநிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, 
   அப்போது கணவனிடம் கோபித்துக் கொண்ட கவுசல்யா வீட்டு அருகே உள்ள கிணற்றில் ஓடி சென்று குதித்து விட்டார்.இதை பார்த்த கணவன் விஜயகுமார் ஓடி சென்று கிணற்றில் குதித்து மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார், இருவருக்கும் நீச்சல் தெரியாததால் கணவன் மனைவி இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்,இதுகுறித்து தகவலறிந்த ஊரக போலீசார் தீயணைப்பு துறை வீரர்களை வரவழைத்து கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் பம்பு செட் உதவியுடன் வெளியேற்றி தம்பதியை சடலமாக மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர், தம்பதியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், 
  கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மனைவியை காப்பாற்ற கணவனும் கிணற்றில் குதித்து நீரில் மூழ்கி தம்பதி இருவரும் உயிரிழந்ததால் ஏழு மாத பெண் கைக் குழந்தையுடன் இரண்டு குழந்தைகளும் ஆதரவற்றவர்களாக மாறிவிட்டதால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,

 

Tags :

Share via