ஒமைக்ரான் 106 நாடுகளில் பரவியது- உலக சுகாதார அமைப்பு தகவல்

by Admin / 23-12-2021 05:30:12pm
ஒமைக்ரான் 106 நாடுகளில் பரவியது- உலக சுகாதார அமைப்பு தகவல்

உலகை உலுக்கி வருகிற ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 106 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கொரோனா தொற்று அதிகரிக்க இந்த ஒமைக்ரான் திரிபுதான் காரணம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் ஆபத்து அதிகளவில் தொடர்வதாகவும் உலக சுகாதார அமைப்பு சொல்கிறது. அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்காவில் இந்த ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உச்சம் அடைந்து, தற்போது குறையத்தொடங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை ஒரு நாளில் 27 ஆயிரம் பேருக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இது 15 ஆயிரத்து 424 ஆக குறைந்துள்ளது.

 

Tags :

Share via