மகா கும்பமேளா கூட்டநெரிசலில் 2000 பக்தர்கள் உயிரிழப்பு
மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக அரசு மறைப்பதாக சிவசேனா எம்பி (உத்தவ் தாக்கரே பிரிவு) சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். மாநிலங்களவையில் உரையாற்றிய அவர், "4-5 நாட்களுக்கு முன்பு கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது, அது கூட்ட நெரிசல் அல்ல, வதந்தி என்று கூறப்பட்டது. பின் 30 பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. கண்களால் பார்த்த சாட்சியங்கள் கொடுத்த புள்ளிவிவரங்கள் படி 2,000 பேர் இறந்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.
Tags :