குடியரசு தலைவர் தேர்தல் பிரதமர் மோடி முதலமைச்சர் மு. க ஸ்டாலின் வாக்களிப்பு

by Editor / 18-07-2022 03:17:58pm
குடியரசு தலைவர் தேர்தல் பிரதமர் மோடி முதலமைச்சர் மு. க ஸ்டாலின் வாக்களிப்பு

தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியும் சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாக்களித்தனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவுவாகும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யாஷ்வந்த  போட்டியிடுகின்றன. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திரமோடி வாக்களித்தார். தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்களும் எம்பிக்களும் வாக்களித்தனர். கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேராக தலைமைச் செயலகம் சென்று வாக்களித்தார். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி யும் வாக்களித்தார். இதைப்போல உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் மஹாராஷ்டிரா முதலமைச்சரை ஏக்நாத் ஷிண்டே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோர் அந்தந்த மாநிலங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். இந்த தேர்தலிலும் பச்சை நிறத்திலும் எம்எல்ஏக்களுக்கு பிங்க் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டன தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் டெல்லி கொண்டு வரப்பட்டு இருபத்தி ஒன்றாம் தேதி எனப்படுகிறது.

 

Tags :

Share via

More stories