மாதம்..மாதம் ரூ.5.5 இலட்சம் அதிர்ஷ்டமழையில் ஆம்பூர் மென்பொருள் நிறுவன ஊழியர்.

by Editor / 22-10-2023 10:38:28pm
மாதம்..மாதம் ரூ.5.5 இலட்சம் அதிர்ஷ்டமழையில் ஆம்பூர் மென்பொருள் நிறுவன ஊழியர்.

தமிழ்நாட்டிலுள்ள வேலூர்மாவட்டம்  ஆம்பூரை சேர்ந்த மென்பொருள்நிறுவனத்தின் ஊழியருக்கு ஐக்கிய அமீரகத்தின் அதிர்ஷ்ட குலுக்கலில் ஜாக்பாட் அடித்துள்ளது. அதன்படி, அவருக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ5.5 லட்சம் என்ற அடிப்படையில் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகிறார். ஆம்பூரை சேர்ந்த மகேஷ்குமார் நடராஜன் (49) என்ற ஐடி ஊழியர் அண்மையில் சவுதி அரேபியாவில் "எமிரேட்ஸ் ட்ரா" என்ற ஜாக்பாட் குலுக்கலில் வெற்றி பெற்றுள்ளார். இதில் அவருக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு (திர்ஹாம் மதிப்பில் 25 ஆயிரம்) இந்திய ரூபாயில் சுமார் ஐந்தரை லட்சம் ரூபாய் மாதம்..மாதம் வழங்கப்படும். இந்நிலையில், மகள்களின் கல்வி மற்றும் பிறரது கல்விக்காக தனது பரிசுத் தொகையில் கணிசமாக செலவிடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags : மாதம்..மாதம் ரூ.5.5 இலட்சம் அதிர்ஷ்டமழையில் ஆம்பூர் மென்பொருள் நிறுவன ஊழியர்.

Share via

More stories

Logo