நாளை சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைக்கிறார்.

by Staff / 12-01-2023 01:14:21pm
நாளை சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைக்கிறார்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  13.01.2023 சென்னை தீவுத்திடலில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியை திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி ஒருங்கிணைத்து வருகிறார். நாளை மேடையேறி கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்த உள்ள கலை குழுவினர் கடந்த ஒரு வாரமாக சென்னையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அடையாறு காந்தி மண்டபத்தில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் கனிமொழி கருணாநிதி கலைஞர்களுடன் தரையில் அமர்ந்து உரையாடி, அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

 

Tags :

Share via

More stories

Logo