புதுச்சேரியில் விட்டு...விட்டு..மழை பெய்து வருகிறது.

by Editor / 02-02-2023 07:22:07am
புதுச்சேரியில் விட்டு...விட்டு..மழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதனால் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் நேற்று என்றும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.கடந்த அரை மணி நேரமாக புதுச்சேரியின் நகரப் பகுதிகளான கடற்கரை சாலை, உப்பளம்,முதலியார் பேட்டை,  புதிய பேருந்து நிலையம், கோரிமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் தவளக்குப்பம், பாகூர், வில்லியனூர் திருபுவனை உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo