மர அறுவை மில்லில் கள்ளசாராயம் காய்ச்சியவர் கைது.

by Editor / 07-03-2022 09:34:29pm
  மர அறுவை மில்லில் கள்ளசாராயம் காய்ச்சியவர் கைது.

  ஆலங்குளம் Csi சர்ச் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் மகன் தினகரன் என்ற ராஜா(54). இவர் ஆலங்குளத்தில் இருந்து அம்பை செல்லும் சாலையில் மர அறுவை மில் வைத்துள்ளார். முன்பு அதிமுகவில் இருந்து தற்போது சசிகலாவின் தீவிர ஆதரவாளராக உள்ளார். இவர் அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள தனது மர அறுவை மில்லில் உள்ள ஒரு அறையில் சாராயம் காய்ச்சி வருவதாக ஆலங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு   சென்று சோதனையிட்டபோது கடுக்காய்,  கருப்பட்டி, பழங்கள் மற்றும் 30 லிட்டர் சாராய ஊறல் போன்றவை அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார்  தினகரனை கைது செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்

  மர அறுவை மில்லில் கள்ளசாராயம் காய்ச்சியவர் கைது.
 

Tags : Counterfeit liquor brewer arrested at woodworking mill.

Share via