கட்டுப்பாடற்ற வேகம் அரசு, தனியார் பஸ்கள் மோதி விபத்து

நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது.கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்றபோது ஆலப்பாக்கம் பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது.இரண்டு பேருந்துகளும் மோதிய வேகத்தில் அரசு விரைவு பேருந்து வயல்வெளியில் இறங்கி பாதியில் சிக்கியது. மற்றொரு பேருந்து சாலை தடுப்பில் மோதி நின்றது. இந்த விபத்தில் பேருந்துகளில் பயணித்த 30 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.கட்டுப்பாடற்ற வேகமே விபத்திற்கு காரணமென்று கூறப்படுகிறது.
Tags : கட்டுப்பாடற்ற வேகம் அரசு, தனியார் பஸ்கள் மோதி விபத்து