மதுரையில் அண்ணாமலை அதிரடி பேட்டி.

by Staff / 11-09-2023 04:37:29pm
மதுரையில் அண்ணாமலை அதிரடி பேட்டி.

இன்று இமானுவேல் சேகரனின் குருபூஜையை முன்னிட்டு பரமக்குடிக்கு சென்றபின் பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த போது செய்தியாளர்களிடம் பேசினார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சனாதனத்தை எதிர்ப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு நல்லது தான் அப்போதுதான் பாஜக வளரும். கலைஞர் இருந்தால் கூட சமமாக கையாண்டு விடுவார். கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார் மேலும் தமிழ் காப்பியங்களுக்கு அவர் உரை எழுதுவார். அரசியலில் ஒரு பால்ட் லைன் உருவானால் தான் புதிய கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கும். மோடியின் திட்டங்கள் மறுபடியும் பாஜகவின் தனித்துவத்தை தாண்டி உதயநிதி ஸ்டாலின் வந்த பிறகு பாஜகவின் வளர்ச்சி அதிகம். சனாதனத்திற்கு எதிராக ஆதரவாகவும் எதுவும் பேசாமல் வெறும் பேச்சாக மட்டும் இருப்பதை மக்கள் பார்க்கிறார்கள். அமைச்சரின் தலைக்கு பரிசுத்தொகை அறிவிப்பது குறித்த கேள்விக்கு அது தவறு தான் அப்படி ஒருவரின் தலைக்கு பரிசுத்தொகை நிர்ணயிக்கிறார் என்றால் அவர் சனாதனத்தை பின்பற்றவில்லை என்று அர்த்தம். சனாதனத்தை பின்பற்றுகிறேன், ஒருவரின் தலைக்கு விலை வைப்பேன் என்றால் அவர் ஒரு போலி சாமியாராக தான் இருக்க வேண்டும். இதை வன்மையாக கண்டிப்பது மட்டுமல்ல இது ஏற்புடையதல்ல. தலைக்கு வேலை வைப்பதற்கு யார் அவர். வெளியூரிலிருந்து வந்து யாருக்கு விலை வைப்பது என்றார்.

 

Tags :

Share via

More stories