பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஓலா பைக் டாக்சி ஓட்டுநர் கைது

சென்னை சூளைமேட்டில் 23 வயது இளம்பெண் நேற்றிரவு ராயப்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல ஓலா பைக் டாக்சியை புக் செய்தார். இதனை ரமேஷ் என்பவர் ஓட்டினார். பைக்கில் செல்லும் போதே ரமேஷ் அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆபாசமாக பேசி வந்ததாகவும் தெரிகிறது. இதனை அந்த பெண் செல்போனில் வீடியோ பதிவு செய்தார். மேலும் தனது குடும்பத்தினருக்கு மெசேஜ் மூலமாக தெரிவித்தார். வீட்டிற்கு வந்ததும் பைக் ஓட்டி வந்த ரமேஷை பிடித்து பெண்ணின் குடும்பத்தினர் ராயப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பிறகு கைது செய்தனர்.
Tags :