திரைப்பட இயக்குனர் சங்க பதவி ஏற்பு
திரைப்பட இயக்குனர் சங்க பதவி ஏற்பு . நேற்று சென்னை வடபழனி கமலா திரையரங்கம் அருகே உள்ள இசைக் கலைஞர்கள் சங்கத்தில் தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக ஆர். வி..உதயகுமார் இந்த முறையும் தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளராக பேரரசு ,பொருளாளராக சரண், துணைத்தலைவர்களாக அரவிந்தராஜ், கே.. எஸ் ரவிக்குமார் ,இணை செயலாளராக சுந்தர். சி, எழில், ஏ. வெங்கடேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.. இவர்களுடன் செயற்கு உறுப்பினர்களாக ராஜகுமாரன் ஆர் மாதேஷ் மனோஜ் குமார் மித்ரன் ஜவகர் எஸ் பிரபு எம் ராஜ்கபூர் ஆர் கண்ணன் என் எஸ் ரமேஷ் கண்ணா ஸ்ரீ ரங்கநாதன் சரவணன் சுப்பையா ஆகியோரும்போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று பதவி ஏற்க உள்ளனர்.
Tags :