மாணவிக்கு ஆபாச செய்தி அனுப்பிய ஆசிரியர்

by Staff / 15-10-2022 10:37:29am
மாணவிக்கு ஆபாச செய்தி அனுப்பிய ஆசிரியர்

கேரளா கண்ணூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஓலையம்பாடியை சேர்ந்த சஜீஷ் (வயது 38) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு செல்போனில் ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பரியாரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சஜீஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo