மதுரை மாநகர எல்லைக்குள் 20,21ம் தேதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை

பிரதமர் மதுரை வருகையையொட்டி டேரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் இயக்கத்தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்திற்கு 3 நாட்கள் பயணமாக வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திரமோடி 20ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற பின்பு மதுரை விமானநிலையம் வருகை தருகிறார்.
தொடர்ந்து மதுரை விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி 21ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து புனிதநீர் எடுத்துக்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமானநிலையம் வருகை தருகிறார். தொடர்ந்து மதுரையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
இந்தநிலையில் மதுரை மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தருவதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மாநகர எல்லைக்குள் 20ம் தேதி முதல் 21ம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்படுவதாகவும், இரண்டு நாட்களில் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரித்துள்ளார்.
Tags : மதுரை மாநகர எல்லைக்குள் 20,21ம் தேதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை