புழல் சிறையில் செல்போன்கள் பறிமுதல்

by Staff / 29-01-2024 12:44:46pm
புழல் சிறையில் செல்போன்கள் பறிமுதல்

புழல் மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டு கைதிகளிடம் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு தண்டனை பிரிவில் உள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக, சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தண்டனை பிரிவில் உள்ள அனைத்து கைதிகளின் அறைகளிலும் காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 2 வெளிநாட்டு கைதிகள் அடைக்கப்பட்டு இருந்த அறைக்குள் இருந்து 2 செல்போன், சார்ஜர், சிம்கார்டு மற்றும் பேட்டரிகள் இருப்பது தெரிந்தது. அவற்றை, சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், கொலம்பியா நாட்டை சேர்ந்த எட்வின் என்க்ரிக், நைஜீரியா நாட்டை சேர்ந்த அகஸ்டின் சிபுக் ஆகியோர், இந்த செல்போன்களை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இவர்கள் இருவரும் சென்னை போதைபொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெளிநாட்டு கைதிகளுக்கு செல்போன் வழங்கியது யார், இவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு சென்றபோது சிறைக் காவலர்கள் செல்போன் வாங்கி கொடுத்தார்களா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

Tags :

Share via