இரண்டாவது முறையாக வாலிபர் போக்சோவில் கைது

by Staff / 10-11-2022 04:56:43pm
இரண்டாவது முறையாக வாலிபர் போக்சோவில் கைது

ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் தீபக்குமார் (27). திருமண மேடை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஆண்டு தீபக்குமார் ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீபக்குமாரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த தீபக்குமார் அந்த சிறுமியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். கடந்த மாதம் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து சிறுமியிடம் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தீபக்குமார் தான் சிறுமியின் குழந்தைக்கு தந்தை என தெரிய வந்தது. இதனையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தீபக்குமாரை 2-வது முறையாக போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories